மதுபோதையில் கிணற்றில் விழுந்தவர் உயிரிழப்பு
காரிமங்கலம் அருகே மதுபோதையில் கிணற்றில் விழுந்த விவசாயி உயிரிழந்த நிலையில், போலீஸ் விசாரணை நடக்கிறது.
Update: 2024-06-24 08:59 GMT
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, காரிமங்கலம் அடுத்த பேகாரஅள்ளி ஊராட்சி வெள்ளையன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் பழனி விவசாயி இவருக்கு வயது 53, இவர் நேற்று மாலை மது அருந்திவிட்டு, அவரது வீட்டின் அருகே யுள்ள விவசாய தோட்டத்தில் உள்ள கிணற்று பகுதியில் நடந்து சென்று கொண்டி ருந்தார். அப்போது கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் அவரை நீண்ட நேரம் காணாததால் அவரை தேடிய போது,கிணற்றில் சடலமாக மிதந்தது தெரிய வந்தது. இதையடுத்து, காரிமங்கலம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில், காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்த, பொதுமக்கள் உதவியுடன் பழனியின் உடலை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து காரிமங்கலம் காவல்துறை யினர் விசாரணை நடத்தி வருகின்றனர்