நகராட்சி குப்பை கிடங்கு அருகே குடிபோதையில் தற்கொலை
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நகராட்சி குப்பை கிடங்கில் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி மேலப்புதூரைச் சேர்ந்தவர் பொன்னாங்கன் மகன் செல்வகுமார் 56. இவருக்கு இரண்டு மகள்கள், ஒரு மனைவி உள்ளனர்.மகள்கள் இருவரும் வெளியூரில் மருத்துவக்கல்லூரியில் பயின்று வர மனைவி ராஜேஷ்வரி வெள்ளமலை பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக உள்ள நிலையில் செல்வக்குமார் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.
இதில் குடிபோதைக்கு அடிமையாகி உடல் பலவீனமாக கூறப்படுகின்றது.இதனால் மன உளைச்சலில் இருந்தவர் பழைய உசிலம்பட்டி நகராட்சி குப்பை கிடங்கு அருகில் உள்ள பயன்படாமல் உள்ள நகராட்சி கட்டிடத்தில் தூக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டார்.தகவலறிந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலையப் போலிசார் செல்வக்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.