சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணியை தொடங்கி வைத்த டிஎஸ்பி!
சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணியை தொடங்கி வைத்த டிஎஸ்பி
புதுக்கோட்டை மாவட்டம் குழிப்பிறை ஊராட்சி குழிப்பிறை கிராமத்தில் 64 சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி முடிக்கப்பட்டு அவற்றை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் குழிப்பிறை ஊராட்சி மன்ற தலைவர் அழகப்பன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் டிஎஸ்பி அப்துல் ரகுமான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்காணிப்பு கேமராக்களின் இயக்கத்தை துவங்கி வைத்தார். குழி பிறை கிராமத்தின் குற்றச்சன்பங்களை தடுக்கும் வகையில் பசுமை குழிப்பறை சாரிட்டபிள் டிரஸ்ட் மூலமாக இப்பணிகள் நடைபெற்றன. இப்பணிகள் நடைபெற்று முடிந்து துவக்க விழா நடைபெற்றது.
இத்துவக்கத்தில் சிசிடிவி கேமராவை துவங்கி வைத்த டிஎஸ்பி அப்துல் ரகுமான் குழிப்பிறை ஊராட்சி மன்றத்தில் மட்டுமே 64 கேமராக்கள் பொருத்தப்பட்டு ஒட்டுமொத்த கிராமத்தின் குற்ற சம்பவங்கள் தடுக்கும் வகையில் அதிநவீன இரவு நேரத்தில் தெளிவாகத் தெரியக்கூடிய உயர்தரமான கேமராக்கள் பொருத்தப்பட்டு இருப்பதாக குழி பிறை ஊராட்சி மன்ற தலைவர் அழகப்பனுக்கு பாராட்டு தெரிவித்தார்.
நிகழ்வில் ஊராட்சி மன்ற பொறுப்பாளர்கள் வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் ஏராளமானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்