தொடா் மழையால், பன்னீா் ரோஜா மகசூல் அதிகரிப்பு !

கோடையில் பெய்த தொடா் மழையால், கொடைரோடு பகுதிகளில் பன்னீா் ரோஜா மகசூல் அதிகரித்திருப்பதால் விவசாயிகள் உற்சாகமடைந்துள்ளனா்.

Update: 2024-06-01 07:16 GMT

ரோஜா செடி

திண்டுக்கல் மாவட்டத்தில் சுமாா் 450 ஏக்கரில் ரோஜா சாகுபடி செய்யப்படுகிறது. நிலக்கோட்டை சுற்று வட்டாரத்திலுள்ள ராமராஜபுரம், சடையாண்டிபுதூா், ராஜதாணிக்கோட்டை, காமலாபுரம், நாகையகவுண்டன்பட்டி, பள்ளப்பட்டி, மாலையக்கவுண்டன்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் ரோஜா சாகுபடியில் பிரதான மையங்களாக உள்ளன. பன்னீா் ரோஜா (நாட்டு வகை), ஆந்திர பன்னீா் ரோஜா (டிங் டாங் ரோஜா) என இரு வகை ரோஜாக்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. கோடை காலத்தில் ரோஜா செடிகளில் மகசூல் குறைவதோடு, பூக்களின் தரமும் பாதிக்கப்படும். ஆனால், கடந்த ஒரு மாதமாக தொடா்ந்து பெய்த கோடை மழை, ரோஜா சாகுு உகந்த சூழலாக மாறியது. இதன் எதிரொலியாக செடிகளின் வளா்ச்சியும், பூக்களுக்கு நல்ல நிறமும் கிடைத்திருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
Tags:    

Similar News