ஆவணம் இல்லாததால் ரூ. 4.36 லட்சம் பறிமுதல்

குமரியில் நடந்த சோதனையின் போது ஆவணங்கள் இல்லாததால் ரூ. 4.36 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

Update: 2024-03-25 10:49 GMT

 குமரியில் நடந்த சோதனையின் போது ஆவணங்கள் இல்லாததால் ரூ. 4.36 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். 

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல்  வரும் 19ஆம் தேதி நடக்கிறது. இதற்காக தேர்தல் நடைமுறைகள் தற்போது அமலில் உள்ளன. குறிப்பாக பறக்கும் படைகள் அமைத்து சோதனைகள் நடைபெற்று வருகின்றன.      இந்த வகையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆறு தொகுதிகளிலும் சோதனைகள் நடைபெற்றன.

இதில் நேற்று இரவு நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி அருகே நாகர்கோவில் பறக்கும் படையினர் சோதனை செய்தபோது அந்த வழியாக அந்த காரை சோதனையிட்ட  போது அதிலிருந்து ஒரு லட்சத்து 30 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த பணம் குடும்ப கோவிலில் பிரிந்த பணம் என்று தெரிவித்தனர்.      கன்னியாகுமரி பறக்கும் படை அதிகாரிகள் ஆரல்வாய்மொழி  பகுதியில் சோதனை செய்தபோது இன்று அதிகாலை கேரள பதிவெண்  கொண்ட லாரியின் இருந்து ஒரு லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. கிள்ளியூர் பறக்கும் படை அதிகாரிகள் தேங்காய்பட்டணம் கடலோர பாதுகாப்பு படை சோதனை சாவடியில் இன்று அதிகாலை வாகன தணிக்கை ஈடுபட்ட போது மீன் வியாபாரியிடம் இருந்து ஒரு லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.    

இது போன்று விளவங்கோடு  பறக்கும் படை அதிகாரிகள் மார்த்தாண்டம் பஸ் நிலைய பகுதியில் இன்று காலை சோதனை மேற்கொண்ட போது பழங்கள் ஏற்றிக்கொண்டு வந்த ஒரு வாகனத்திலிருந்து 85 ஆயிரத்து 200 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.      இந்த வகையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை நடந்த சோதனையில் மொத்தம் 4 லட்சத்து 36 ஆயிரத்து 200 ரூபாய்  பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News