சேலத்தில் வரத்து குறைவால் அவரைக்காய் விலை உயர்வு

சேலத்தில் வரத்து குறைவால் உழவர் சந்தைகளில் அவரைக்காய் விலை உயர்ந்துள்ளது.

Update: 2024-07-04 09:33 GMT

சேலத்தில் வரத்து குறைவால் உழவர் சந்தைகளில் அவரைக்காய் விலை உயர்ந்துள்ளது.


சேலம் மாவட்டத்தில் சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, தாதகாப்பட்டி உள்பட 11 உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் விளையும் காய்கறி மற்றும் பழங்களை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். மேலும் பெங்களூரு, ஊட்டி, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பீன்ஸ், பீட்ரூட், கேரட், உருளைக்கிழங்கு உள்ளிட்ட பொருட்களும் கொண்டு வரப்பட்டு விற்கப்படுகின்றன. காரிப்பட்டி, அயோத்தியாப்பட்டணம், ஓமலூர், வீரபாண்டி, மன்னார்பாளையம், காடையாம்பட்டி உள்ளிட்ட சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவரை அதிகளவு பயிரிடப்படுகிறது. ஆனால் தற்போது உழவர் சந்தைகளுக்கு அவரை வரத்து வெகுவாக குறைந்துள்ளது.

இதனால் அதன்விலை உயர்ந்து காணப்படுகிறது. கடந்த மாதம் கிலோ ரூ.85 வரை விற்ற அவரை இன்று ரூ.96 முதல் ரூ.100 வரை விற்பனையானது. வெளி மார்க்கெட்டுகளில் அவரை கிலோ ரூ.110 வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால் அவற்றை பொதுமக்கள் குறைந்தளவே வாங்கி சென்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறும் போது, ‘தற்போது சீசன் இல்லாததால் உழவர் சந்தைகளுக்கு அவரை வரத்து குறைந்துள்ளது. மேலும் அதன் விலை உயர்ந்துள்ளது. விளைச்சல் அதிகரித்து வர தொடங்கினால் தான் அதன் விலை குறையும்’ என்றனர்.

Tags:    

Similar News