வரத்து குறைவால் எலுமிச்சை விலை 3 மடங்கு உயர்வு
ரூ.2,000 – 2,500 வரை விற்பனையான 50 கிலோ எலுமிச்சை மூட்டை, தற்போது ரூ.8,000க்கு விற்பனையாகி வருகிறது.
மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில், ரூ.2,000 – 2,500 வரை விற்பனையான 50 கிலோ எலுமிச்சை மூட்டை, தற்போது ரூ.8,000க்கு விற்பனையாகி வருகிறது.
வெயிலின் காரணமாக வரத்து குறைந்துள்ளதால், மேலும், 2 மாதங்களுக்கு விலை குறையாது என, வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளார். கடந்த சில நாள்களுக்கு முன்பு தென் மாவட்டங்களில் சூரியன் சுட்டெரித்து, அதனால், பொதுமக்கள் வெப்பத்தை சமாளிக்க பொதுமக்கள் பலர் இளநீர், எலுமிச்சை ஜூஸ், மோர், கரும்பு சாறு ஜூஸ் பருகுவது வழக்கமாக கொண்டிருந்தனர். கோடை வெய்யில் தாக்கம் காரணமாக தென் மாவட்டங்களில் எலுமிச்சை மூட்டை சந்தையில் பல மடங்கு விலை உயர்ந்து, எலுமிச்சை விலை உயர்ந்து காணப்பட்டது. மதுரை மாவட்டத்தில் பகல் பொழுது வெப்பம் அதிகமாக காணப்படுகிறது. மாலை நேரங்களில் சில இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது..