தொடர் மழையால் இடிந்து விழுந்த ஆரம்ப சுகாதார நிலைய சுற்றுசுவர்
பத்துகாணியில் தொடர் மழையால் இடிந்து விழுந்த ஆரம்ப சுகாதார நிலைய சுற்றுசுவரை சீரமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கையை விடுத்துள்ளனர்.
குமரி மாவட்ட மலையோர கிராமங்களில் தொடர் மழை காரணமாக அதிக தொடர் சேதங்கள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் பத்துகாணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக இடைவெளி இன்றி கனமழை பெய்து வருகிறது.இதன் காரணமாக பத்து காணியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலை யத்தின் சுற்றுசுவர் மற்றும் அதனுடைய அடித்த ளம் முழுமையாக நேற்று திடீரென இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தால் ஏற்கனவே சேதமடைந்த நிலையில் பராமரிப்பு இல்லாமல் பழுதடைந்த மருத்துவமனை கட்டிடத்தின் பின்புறம் உள்ள இணைப்பு கட்டிடத்தின் 2அறைகளும் இடிந்து விழும் சூழ்நிலையில் நிலையில் உள்ளது.
இந்த ஆரம்ப சுகாதார நிலையம் ஆனது மலையோர கிராம மக்களுக்கு வரப்பிர சாதமாக விளங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் கேட்டு அப்பகுதி மக்கள் பல்வேறு கட்ட மனுக்கள் கொடுத்துள்ளனர். மருத்துவத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காத சூழ்நிலையிலும் கட்டடங்கள் பராமரிப்பற்ற நிலையிலும் காணப்படுகிறது. அவசர தேவைகளுக்காக மக்கள் மருந்து வாங்குவதற்காக ஒருவித அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளது. எனவே உடனடியாக இடிந்து விழுந்த சுவரை சீரமைக்கவும் சேதமாகி இருக்கும் கட்டடத்தை சீரமைக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கையை விடுத்துள்ளனர். .