ரயில்வே நிலத்தில் குப்பைகளை கொட்டுவதால் சிக்கல்
வடமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பின்புறம் இருக்கும் அங்கன்வாடி மையம் அருகில் 100 மீட்டர் தூரத்திற்கு ரயில்வே நிலத்தில் சிலர் குப்பைகொட்டுகின்றனர்.
Update: 2024-03-11 06:14 GMT
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பின்புறம் இருக்கும் அங்கன்வாடி மையம் அருகில் 100 மீட்டர் தூரத்திற்கு ரயில்வே நிலத்தில் சிலர் குப்பைகொட்டுகின்றனர். சில சமூக அக்கறையற்ற ஜென்மங்கள் குப்பைகளை கண்டபடி வீசி சென்று வருகின்றனர். இதனால் இப்பகுதியில் துர்நாற்றம், டெங்கு கொசு உற்பத்தியாகிறது. இதற்கு தீர்வு காண பேரூராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும். பேரூராட்சி ஊழியர்கள் வழக்கமாக குப்பை சேகரிக்கும் பகுதியில் குப்பைகளை போடாமல் இப்படி பொறுப்பற்ற முறையில் கண்ட இடங்களில் வீசி செல்வோரை எப்படி திருத்துவது. இதே நிலை தொடர்ந்தால் ஒரு கட்டத்தில் ரயில்வே நிலத்தை அடைத்து விடுவார்கள். இதனால் ஏராளமானோர் பாதிக்கப்படுவார்கள். இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.