மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்!

மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் புதுக்கோட்டை அலுவலகத்தில் நடைபெறுவதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

Update: 2024-03-06 09:51 GMT

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், புதுக்கோட்டை மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் பொறி.ஜி.சேகர் அவர்கள் தலைமையில் புதுக்கோட்டை கோட்டத்திற்குட்பட்ட புதுக்கோட்டை, இலுப்பூர் மற்றும் கந்தர்வகோட்டை பகுதிக்கான மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 07.03.2024 அன்று காலை 10.30 மணி முதல் 01.00 0णी வரை செயற்பொறியாளர் இயக்குதலும் காத்தலும் புதுக்கோட்டை அலுவலகத்தில் நடைபெறுவதால் புதுக்கோட்டை கோட்டத்திற்குட்பட்ட மின்நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்கள் மேற்படி கூட்டத்தில் மேற்பார்வை பொறியாளர் அவர்களை நேரில் சந்தித்து தங்களின் மின்வாரிய சம்மந்தமான குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம். மேற்கண்ட தகவலை புதுக்கோட்டை இயக்குதலும் காத்தலும் செயற்பொறியாளர் (பொ) பொறி.எஸ்.கண்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News