நெல்லையில் முன்கார் பருவ சாகுபடி பணிகள் தொடக்கம் !!
விவசாயிகள் முன்கார் பருவ சாகுபடி பணிகளை தொடங்கியுள்ளனர்.
By : King 24x7 Angel
Update: 2024-05-25 06:37 GMT
திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக விவசாயிகள் முன்கார் பருவ சாகுபடி பணிகளை தொடங்கியுள்ளனர்.