எடப்பாடி பழனிச்சாமிக்கு எஸ்.டி.பி.ஐ கட்சியினர் புத்தகம் பரிசு
எடப்பாடி பழனிச்சாமிக்கு எஸ்.டி.பி.ஐ கட்சியினர் புத்தகம் பரிசு வழங்கினர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-04-06 14:25 GMT
எடப்பாடி பழனிச்சாமிக்கு புத்தகம் வழங்கல்
ஈரோட்டிற்கு வருகை தந்த அஇஅதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி எஸ்.டி.பி.ஐ கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் ப.முகமது லுக்மானுல் ஹக்கீம் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து பெண் இனப் போராளி என்ற முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி ஜெ.ஜெயலலிதா பற்றிய புத்தகத்தை பரிசாக வழங்கினார்.
இந்நிகழ்வின் போது எஸ்.டி.பி.ஐ கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் க.முனாப், எஸ்.டி.டி.யூ தொழிற்சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் M.முகமது அலி ஆகியோர் உடன் இருந்தனர்.