குமரியில் கல்விக்கடனுதவி: மாவட்ட ஆட்சியர்  வழங்கல்

குமரியில் கல்விக்கடனுதவி மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

Update: 2024-02-15 13:23 GMT
கல்வி கடன் வழங்கிய கலெக்டர்

கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் அனைத்து வங்கிகளும் இணைந்து நடத்திய மாபெரும் கல்விக் கடன்  முகாமானது  நாகர்கோவில்  மகளிர் கிறிஸ்தவ கல்லூரி கலையரங்கில் இன்று (15.02.2024) நடைபெற்றது.

இம்முகாமில்  மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் கலந்து கொண்டு மாணவ மாணவியர்களுக்கு கடனுதவிகள் வழங்கி பேசுகையில்- தமிழ்நாடு அரசானது பள்ளிக்கல்லூரி மாணவ மாணவியர்கள் இடைநிற்றலை தவிர்ப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.  

அதனடிப்படையில் இன்று நடைபெற்று வரும் கல்விக்கடன் முகாமின் நோக்கமானது 12ம் வகுப்பு முடித்து, மேற்படிப்பிற்காக கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாட்டின் பிற மாவட்டங்கள், பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு கல்வி பயில செல்லும் மாணவ மாணவியர்களின் நலனுக்கே ஆகும்.

இன்று நடைபெற்ற 2ம் கட்ட கல்விக்கடன் முகாமில் மேற்படிப்பு பயிலும் 70 மாணவ மாணவியர்களுக்கு வங்கிகள் மூலமாக ரூ.4.5 கோடி மதிப்பில் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது  என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். என பேசினார். 

இம்முகாமில்  மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பிரவின் குமார், மகளிர் கிறிஸ்தவ கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முனைவர் உஷா, வங்கியாளர்கள், மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Tags:    

Similar News