வடமதுரை ஒன்றிய கூட்டத்தில் கல்வி அதிகாரி புலம்பல்
வடமதுரை ஒன்றிய கூட்டத்தில் கல்வி அதிகாரி புலம்பியுள்ளார்.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-30 15:50 GMT
ஆசிரியரை தாக்கும் மாணவர்கள்
வடமதுரை அரசு பள்ளிகளில் சில மாணவர்களது நடவடிக்கைகளை பார்க்கும் போது வேதனையாக உள்ளதாக,'' வட்டார கல்வி அலுவலர் நல்லுச்சாமி பேசினார்.
வடமதுரை ஒன்றிய கவுன்சில் கூட்டத்தில் அவர் பேசியதாவது: கிராமங்களில் மாணவர்கள் அதிக நாட்கள் விடுமுறை எடுக்கின்றனர். இதனால் அவர்களின் கல்வித்தரம் குறைகிறது.
இடைநிற்றலும் அதிகமாக உள்ளது. பள்ளிகளில் குடிநீர் குழாய், பைப் லைன் உள்ளிட்ட உபகரணங்களை சேதமாக்கும் மாணவர்களும் உள்ளனர்.
வடமதுரையில் ஒன்றிய கலைவிழா போட்டி நடந்தபோது சில மாணவர்கள் மது அருந்திவிட்டு வந்திருந்தனர். அவர்களிடம் கேட்டபோது அலட்சியமாக பதில் சொன்னார்கள். இவ்வாறு கூறினார்.