எருமபட்டி அன்னை மாதம்மாள் ஷிலா கல்லூரியில் கல்விக்கடன் சிறப்பு முகாம்
எருமபட்டி அன்னை மாதம்மாள் ஷிலா கல்லூரியில் கல்விக்கடன் சிறப்பு முகாம் நடைபெற்றது
By : King 24x7 Website
Update: 2023-12-05 17:10 GMT
எருமபட்டியில் உள்ள அன்னை மாதம்மாள் ஷீலா கலைக் கல்லூரியில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின்படி கல்விக்கடன் பெறுவது குறித்தும் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு சேந்தமங்கலம் துணை வட்டாட்சியர் பாஸ்கரன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் பரிமாறு கலைஞர் முன்னிலை வகித்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் எருமப்பட்டி இந்தியன் வங்கி கிளை மேலாளர் விமல்குமார் கலந்து கொண்டு கல்விக்கடன் பெறுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் எருமப்பட்டி வருவாய்த்துறை ஆய்வாளர் பாலகுமார், எருமப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் பிரவீன் ராஜா, கல்வி கடன் ஒருங்கிணைப்பாளர் கல்லூரி பேராசிரியர்கள் ராஜ்குமார், பிரகாஷ் மற்றும் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்