எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தேர்தல் -ஆகஸ்டுக்குள் நடத்தி முடிக்க உத்தரவு
எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தேர்தலை ஆகஸ்ட் மாதத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கவுன்சிலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
Update: 2024-06-28 03:13 GMT
எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தேர்தலை ஆகஸ்ட் மாதத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கவுன்சிலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. வழக்கறிஞர் சங்கத்தில் 2 முறை பொறுப்பில் இருந்தவர்கள் 3 ஆவது முறையாக போட்டியிடக்கூடாது என்ற பார் கவுன்சில் அறிவிப்பை எதிர்த்து வழக்கறிஞர் சந்தன் பாபு வழக்கு தொடர்ந்தார். வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 30 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.