அங்கன்வாடி மையம், நியாய விலை கடைகளை திறந்து வைத்த எழிலரசன் எம் எல் ஏ.
காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மின் நகர் பகுதியில் மழைநீர் காலங்களில் நீர் தேங்காத வண்ணம் நீடிக்க புதிய சிமெண்ட் சாலை ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. இன்று அதன் பணியினை சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் துவக்கி வைத்தார். ஏற்கனவே இப்பகுதியில் மழைநீர் வடிகால் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து கீழ்க்கதிர்பூர் ஊராட்சியில், 890 குடும்ப அட்டைகள் உள்ள நிலையில் அதிலிருந்து புதிய காலனி பகுதிக்கு நியாய விலை கடை வேண்டும் என்று கோரிக்கை வைத்ததின் அடிப்படையில் 330 குடும்ப அட்டைகள் பிரிக்கப்பட்டு ஏற்கனவே இருந்த நியாய விலை கடையினை, புதுப்பிக்கப்பட்டு இன்று அதனை சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் துவக்கி வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்களை வழங்கினார். மேலும் அதே கிராம ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 12.6 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டும் பணி துவங்கி நிறைவு பெற்றிருந்த நிலையில் இன்று சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் திறந்து வைத்து குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மலர் கொடி குமார், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்யா சுகுமார், திமுக ஒன்றிய செயலாளர் குமார், திமுக பொதுக்குழு உறுப்பினர் எம் எஸ் சுகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் வரதராஜன், ஊராட்சி மன்ற தலைவர் திலகவதி குமரேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.