பெண்ணிடம் இருந்த எட்டு பவுன் நகை மாயம் - போலீசார் விசாரணை

விருதுநகர் ராஜாஜி நகரிலுள்ள தோலாண்டி திருமண மண்டபத்திற்கு வந்த சித்ரா என்ற பெண்ணிடம் இருந்த எட்டு பவுன் நகை மாயமான நிலையில் போலீசில் புகார்.

Update: 2024-02-22 06:36 GMT
 பவுன் நகை மாயம் - போலீசில் புகார்
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சித்ரா வயது 48 இவர் திண்டுக்கல்லில் உள்ள மெட்ரிகுலேஷன் பள்ளியில் பணி புரிந்து வருகிறார்.  இவர் கடந்த 19ஆம் தேதி விருதுநகர் தோழாண்டி நாடார் மண்டபத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக கடந்த 18ஆம் தேதி சித்ராவும் அவருடைய கணவர் மணிவேல் என்பவரும் பேருந்தில் திண்டுக்கலில் இருந்து திருமங்கலம் வந்ததாகவும், திருமங்கலம் வந்து பார்த்த பொழுது தனது பையில் நகைகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. திருமங்கலத்தில் இருந்து திருநெல்வேலி செல்லும் பேருந்தில் ஏறி விருதுநகர் எம்ஜிஆர் சிலை பேருந்து நிறுத்தம் வந்ததாகவும், அங்கிருந்து மற்றொரு பேருந்து ஏறி அல்லம்பட்டி முக்கு ரோடு வந்து இறங்கியதாகவும், அதை தொடர்ந்து ஆட்டோவில் தோழாண்டி நாடார் கல்யாண மண்டபத்திற்கு சென்றதாகவும் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து பையை பார்த்த பொழுது நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சடைந்ததாகவும், காணாமல் போன நகையின் மதிப்பு 8 பவுன் இருக்கும் எனவும் அதன் மதிப்பு 2 லட்சத்து 40 ஆயிரம் எனவும் திருமங்கலத்தில் இருந்து விருதுநகர் கருமாரிமடம் வந்த பேருந்தில் சித்ரா என்ற பெண்ணின் அருகே பார்த்தால் அடையாளம் சொல்லக்கூடிய இரண்டு பெண்கள் இருந்ததாகவும் அவர்கள் எடுத்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சித்ரா அளித்த புகாரி அடிப்படையில் கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .
Tags:    

Similar News