ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை மாதா ஆலய தேர்பவனி
திருமானூர் அருகே ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை மாதா ஆலயத்தில் பெரும் திருவிழாவை ஒட்டி அலங்கார தேர்பவனி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
திருமானூர் அருகே 300ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்ட ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை மாதா ஆலயத்தின் பெருந் திருவிழாவை ஒட்டி நடைபெற்ற அலங்கார தேர் பவனியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்டம் திருக்காவலூர் எனும் ஏலாக்குறிச்சியில் புகழ் பெற்ற புனித அடைக்கல அன்னை ஆலயம் உள்ளது. 1716 ஆண்டு வீரமாமுனிவரால் கட்டப்பட்டு, தமிழக அரசின் ஆன்மீக சுற்றுலா தளங்களில் ஒன்றான இந்த பழமை வாய்ந்த ஆலயத்தில் 53 அடி உயரமுள்ள பித்தளையிலான மாதா சொரூபம், ஜெபமாலை பூங்கா அமைந்துள்ளது தனிச்சிறப்பாகும். இந்த ஆலயத்தின் 293-ம் ஆண்டு திருவிழா கடந்த ஏப்ரல் 13 ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர்பவனி நேற்று இரவு நடைபெற்றது. இதனையொட்டி கும்பகோணம் மறைமாவட்ட ஆயர் ஜீவானந்தம் அமலநாதன் தலைமையில் தேர்திருவிழா சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. பங்குதந்தை தங்கசாமி மின்விளக்குகளுடன் அலங்கரிக்கபட்ட அலங்கார தேர்பவனியை தொடங்கி வைத்தார். வாணவேடிக்கை , வாத்தியங்கள் முழங்க தேர்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
இதில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் பல்வேறு வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர் திருவிழாவில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் திருவிழா குறித்து பங்குத்தந்தை தங்கசாமி கூறுகையில், ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயத்திற்கு தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொண்டனர்.
வேண்டியதை நிறைவேற்றி தரும் அடைக்கல அன்னையை பார்க்கவும் தரிசிக்கவும் ஆலயத்திற்கு வரக்கூடிய பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தவாறு உள்ளதாக கூறினார்..