மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் தர்ணா
தனக்கு சொந்தமான நிலத்தை அளக்க நடவடிக்கை எடுக்க கோரி தர்ணாவில் ஈடுபட்ட முதியவர்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-20 05:07 GMT
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் தர்ணா
திருச்சி மாவட்டம் முசிறி எடுத்த பெரமங்கலத்தை சேர்ந்தவர் தாயுமான். இவர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு, தனது நிலத்தை அளந்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி திடீரென அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அழைத்துச் சென்றனர்.