சேலத்தில் விஷம் குடித்து முதியவர் தற்கொலை
Update: 2023-12-09 05:20 GMT
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த மூக்கனூர் கொட்டாய் காட்டுவளவு பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 68), விவசாயி. மனைவி ஈஸ்வரியும், மகனும் திருப்பூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகின்றனர். மகளுக்கு திருமணம் ஆகி விட்டது. பழனிசாமி புதிதாக வீடு கட்டியுள்ளார். அந்த வீட்டுக்கு மின் இணைப்பு கேட்டு இருந்தார். பக்கத்து நிலத்தில் வழியாகத்தான் மின்இணைப்பு பெற வேண்டி இருந்ததாகவும், அதற்கு அவர்கள் அனுமதி மறுத்ததாகவும் தெரிகிறது. இதில் மனம் உடைந்த பழனிசாமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.