மயங்கி விழுந்த முதியவர் உயிரிழப்பு
அலைமகள் நகரில் மயங்கி விழுந்த முதியவர் மூக்கில் அடிபட்டு உயிரிழந்தார்.
Update: 2024-05-11 14:56 GMT
அலைமகள் நகரில் மயங்கி விழுந்த முதியவர் மூக்கில் அடிபட்டு உயிரிழப்பு. காவல்துறை வழக்கு பதிவு. கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகில் உள்ள அலைமகள் நகர் பகுதியில் வசித்து வந்தவர் ராதாகிருஷ்ணன் வயது 65. இவர் ஓய்வு பெற்ற டிஎன்பிஎல் தொழிலாளி. அண்மைக்காலமாக ராதாகிருஷ்ணன் தனியாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில் மே 7-ம்தேதி இரவு 8 மணியில் இருந்து, மறுநாள் காலை மே 8-ம் தேதி காலை 7 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் ராதாகிருஷ்ணன் மயங்கி கீழே விழுந்ததில் அவருக்கு மூக்கில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அறிந்த அவரது மகள் திவ்யா வயது 32 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று உயிரிழந்த ராதாகிருஷ்ணனின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.