கார் மோதி முதியவர் உயிரிழப்பு
கருமத்தம்பட்டி அருகே இரவு நேரத்தில் சாலையை கடக்க முயன்றபோது கார் மோதியதில் முதியவர் உயிரிழந்தார்.;
Update: 2024-02-02 16:23 GMT
கருமத்தம்பட்டி அருகே இரவு நேரத்தில் சாலையை கடக்க முயன்றபோது கார் மோதியதில் முதியவர் உயிரிழந்தார்.
கோவை மாவட்டம், சூலூர், கருமத்தம்பட்டி அருகே உள்ள பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் இன்னாச்சிமுத்து வயது 77. இவர் டிசம்பர் 31ஆம் தேதி இரவு 11: முக்கால் மணியளவில் கோவை- கரூர் சாலையில், தென்னிலையில் உள்ள எம்.டி.எஸ். பேக்கரி அருகே சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது, அதே சாலையில் கோவையைச் சேர்ந்த சாய்ராம் என்பவர் ஓட்டி வந்த கார், சாலை கடக்க முயன்ற இன்னாச்சி முத்து மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இன்னாச்சி முத்துவுக்கு முன்நெற்றி, வயிறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து இன்னாச்சி முத்துவின் மனைவி லூர்துமேரி வயது 65 என்பவர், அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொஆண்ட காவல் துறையினர், உயிரிழந்த இன்னாச்சி முத்துவின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக காரை வேகமாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய சாய்ராம் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர் தென்னிலை காவல் துறையினர்.