ஆத்தூரில் நிலத்தகராறில் சிகிச்சையில் இருந்த முதியவர் பலனின்றி உயிரிழப்பு

ஆத்தூர் அருகே வரப்பு தகராறில் படுகாயம் அடைந்த ஜோதிவேல் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.;

Update: 2024-05-02 09:48 GMT
ஆத்தூரில் நிலத்தகராறில்  சிகிச்சையில் இருந்த முதியவர்  பலனின்றி உயிரிழப்பு

இறந்தவர் 

  • whatsapp icon

சேலம் மாவட்டம் மல்லியகரை காவல் நிலைய எல்லைகீரிப்பட்டி பேரூராட்சி பத்தாவது வார்டு பகுதியைச் சேர்ந்தஜோதிவேல் என்பவருக்கும் பக்கத்து காட்டுக்காரரான ராஜி என்பவருக்கும் வரப்பு ஓரம் இருந்த மரங்கள் மூலமாக நிழல் அடிப்பதாகஅடிக்கடி தகராறு வருவது வாடிக்கையாக இருந்து வந்த நிலையில்,

கடந்த 30 -ம் தேதி இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டதில் ஜோதிவேல் என்பவருக்கு பின் தலையில் காயம் ஏற்பட்டு தனது மனைவி லீலாவதி உடன் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு நேற்று சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.

இது சம்பந்தமாக எதிரிகள் ராஜி, வினோ,கள்ளக்குறிச்சி மாவட்டம் வெள்ளிமலை தாலுக்கா வருவாய் ஆய்வாளர் வெங்கடேஷ் ஆகியோர் தலைமறைவாகியுள்ளனர் எதிர் தரப்பினர் கொடுத்த புகாரின் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது போலீசார் தீவிர விசாரணைக்கு கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News