முதியோர் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

தென்காசியில் முதியோர் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது;

Update: 2024-03-14 08:13 GMT

விழிப்புணர்வு நிகழ்ச்சி

தென்காசி மூத்தோர் மன்றம் மற்றும் ஹெல்ப் ஏஜ் இந்தியா தொண்டு நிறுவனம் இனணந்து முதியோர்களுக்கான டிஜிட்டல் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. தென்காசி திருவள்ளுவர் கழக அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி மூத்தோர் மன்ற தலைவர் அழகராஜா தலைமை தாங்கினார். கதிர்வேல் இறைவணக்கம் பாடினார். பொறியாளர் முத்துசாமி பிறந்தநாள் வாழ்த்து கூறினார். செயலர் ராமலிங்கம் கடந்த மாத கூட்ட அறிக்கையையும், பொருளாளர் நல்லாசிரியர் கை. கணேச மூர்த்தி பிப்ரவரி மாத வரவு செலவு அறிக்கையையும் தாக்கல் செய்து ஓப்புதல் பெற்றனர். டாக்டர் முத்தையா மருத்துவ பாதுகாப்பு என்ற தலைப்பில் பேசினார். ஹெல்ப் ஏஜ் இந்தியா பொது மேலாளர் முத்துகிருஷ்ணன் முதியோர்களுக்கான டிஜிட்டல் பாதுகாப்பு மொபைல் வாலட்கள், வாட்ஸ்அப், டெலிவரி ஆப்ஸ், இணையப் பாது காப்பு, சமூக ஊடகப் பாதுகாப்பு, சைபர் பாதுகாப்பு, கடவுச்சொல் பாதுகாப்பு போன்றவை பற்றி எடுத்துரைத்தார். முடிவில் கிருஷ்ணன் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தென்காசி மூத்தோர் மன்றத்தின் தலைவர் அழக ராஜா, செயலர் ராமலிங்கம், பொருளாளர் கணேசமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News