பெரணமல்லூர் அருகே அதிக மாத்திரைகளை சாப்பிட்டு மூதாட்டி பலி
பெரணமல்லூர் அருகே அதிக மாத்திரைகளை சாப்பிட்டு மூதாட்டி உயிரிழந்தார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-14 16:02 GMT
கோப்பு படம்
திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அடுத்த மேல்சாத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மனைவி சாந்திக்கு (வயது 68) நீரிழிவு நோய் இருந்து வந்தது. இதனால் மனவேதனையில் இருந்த அவர் அதிக மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி விழுந்தார்.
அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் மூதாட்டி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து பெரணமல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.