கம்பம் அருகே அடையாளம் தெரியாத கார் மோதி மூதாட்டி பலி !!
தேனி மாவட்டம் கம்பம் பைபாஸ் சாலையில் ஹர்பனா கிரிக்கெட் மைதானத்திற்கு அருகே சுமார் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி மீது அடையாளம் தெரியாத கார் மோதி உயிர் இழந்தார்.;
By : King 24x7 Angel
Update: 2024-05-23 06:03 GMT
வழக்குப்பதிவு
தேனி மாவட்டம் கம்பம் பைபாஸ் சாலையில் ஹர்பனா கிரிக்கெட் மைதானத்திற்கு அருகே சுமார் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி மீது அடையாளம் தெரியாத கார் மோதி உயிர் இழந்தார். இது குறித்து கம்பம் கிராம நிர்வாக அலுவலர் தங்கராசு கம்பம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் பெண் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.