வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் மூதாட்டி பலத்த காயம்
பழநி அருகே கீரனூரில் மூதாட்டி மீது வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் அவர் பலத்த காயமடைந்தார்.;
Update: 2024-06-06 07:55 GMT
பழநி அருகே கீரனூரில் மூதாட்டி மீது வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் அவர் பலத்த காயமடைந்தார்.
பழநி அருகே கீரனூரில் துர்க்கை அம்மன் காலனி பகுதியில் குடிசை மாற்று வாரியத்தின் கீழ் கட்டப்பட்ட வீட்டில் வசித்து வருபவர் லட்சுமி (68). இவரது வீட்டில் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் அவர் பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக பழநி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தகவல் அறிந்து வந்த வருவாய்த்துறை மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் சேதமடைந்த வீட்டை பார்வையிட்டனர்.