அதிநவீன வண்ண பலூனை பறக்கவிட்டு தேர்தல்  விழிப்புணர்வு

நாகர்கோவிலில் அதிநவீன வண்ண பலூனை பறக்கவிட்டு தேர்தல் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.

Update: 2024-03-28 05:04 GMT

  நாகர்கோவிலில் அதிநவீன வண்ண பலூனை பறக்கவிட்டு தேர்தல் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது. 

கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தலில் அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி வடசேரி பேருந்து நிலையத்தில் அதிநவீன வண்ண பலூனை பறக்கவிட்டு வாக்காளர்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தேர்தல் அலுவலர், கலெக்டர் ஸ்ரீதர் தலைமை வகித்தார்.  மேலும் அவர் கூறுகையில், -            

 வடசேரி பேருந்து நிலையத்தில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் நடைபெறும் நாளான 19.04.2024 அன்று வரை “தேர்தல் திருவிழா தேசத்தின் பெருவிழா” என்பதை வலியுறுத்தி உருவாக்கப்பட்ட அதிநவீன வண்ண பலூனை பறக்கவிடப்பட்டுள்ளது. மேலும் “மனதில் உறுதி வேண்டும் மனசாட்சி படி வாக்களியுங்கள்” என்ற தலைப்பில் உருவாக்கப்பட்ட செல்பி பாயிண்ட் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. வாக்குரிமை பெற்ற அனைவரும் தங்களது ஜனநாயக கடமையினை ஆற்ற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறினார்.      

 தொடர்ந்து  தனியார் மூன்று சக்கர வாகனங்களில் (ஆட்டோ) “வாக்களிப்பதில் பெருமை கொள்வோம் இந்திய ஜனநாயகத்தில் பங்கு கொள்வோம்” என்ற வாசகம் பொருந்திய ஒட்டுவில்லையினை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு, வாக்காளர் கையெழுத்து இயக்கத்தினை துவக்கி வைத்தார்.        

இந்நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் பீபீ ஜான், உதவி தேர்தல் அலுவலர் எஸ்.காளீஸ்வரி,  மகளிர் சுயஉதவினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News