நாமக்கலில் துணிப்பைகளை வழங்கி தேர்தல் விழிப்புணர்வு!

நாமக்கலில் 100 சதவிகித வாக்கு நமது இலக்கு என்பதை வலியுறுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வாசக துணிப்பைகள் வழங்கப்பட்டது.

Update: 2024-04-17 16:11 GMT

ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாமக்கல் மாவட்ட நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் உமா அவர்களின் அறிவுறுத்தலின்படி இன்று (17/04/2024) மாலை , மகளிர் திட்டத்தின் திட்ட இயக்குனர் செல்வராஜ் அவர்களின் தலைமையில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்ட துணிப்பைகளை வணிகர்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கிடும் வகையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் அவர்களிடம் வழங்கினார். இதனை தொடர்ந்து நூறு சதவிகித வாக்கு நமது இலக்கு என்பதை வலியுறுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வாசக துணிப்பைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் தொடர்பு அலுவலர் ராஜேஸ்கண்ணா, டாஸ்மாக் வட்டாட்சியர் சசிகலா, துணை திட்ட அலுவலர் பெருமாள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News