ராமநாதபுரம் அருகே வீடுகளில் கருப்புக் கொடி கட்டி தேர்தல் புறக்கணிப்பு

ஆணைகுடி கிராம பொதுமக்கள் கருப்புக்கொடி ஏந்தி தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-04-15 14:53 GMT

தேர்தலை புறக்கணித்து ஓட்டபட்ட போஸ்டர்

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் ஆணைகுடி கிராமத்தில் உப்பளம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர் கிராம பொதுமக்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் நடக்க இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் கருப்புக் கொடி போராட்டத்தை நடத்தியதால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது .

கிராம பொதுமக்கள் தெரிவிக்கையில் உப்பளம் அமைப்பதற்கு பலமுறை போராடியும் அனைத்து பணிகளையும் தொடங்கி வரும் நிலையில் பலமுறை போராட்டம் நடத்தி வருகின்றோம் ஆனால் மாவட்ட ஆட்சியர் எங்கள் கோரிக்கையை ஏற்க வில்லையென்றும் எங்கள் ஊருக்கு வந்து பார்வை இடவும் இல்லை என்றும் தெரிவித்தனர்.

மேலும் இந்த உப்பளம் அமைவதால் ஆணைகுடி, களரி, சாம்பகுளம் சுமைதாங்கி உட்பட் சுற்றியுள்ள கிராமத்தில் விவசாயம் மிகவும் பாதிக்கப்பட்டு குடிநீர் ஆதாரங்கள் பாலாகிவிடும் என்று கிராம மக்கள் ஆதங்கத்துடன் கருப்பு கொடியுடன் எதிர்ப்பு தெரிவிக்கின்றோம் என்றும் நாடாளுமன்ற தேர்தலில் புறக்கணிப்போம் என்றும் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வருவாய் துறையினர் , காவல் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News