பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தேர்தல் பிரசாரம்
திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழகத்தை கெடுத்தது அதிமுகவும் திமுகவும் தான் என அன்புமணி ராமதாஸ் பரபரப்பாக குற்றம் சாட்டினார்.
Update: 2024-04-17 09:54 GMT
திண்டுக்கல்லில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது: போதைப் பொருட்கள் நடமாட்டத்தை அதிகரித்து தமிழகத்தை கெடுத்தது அதிமுக, திமுக தான்.பாமக சார்பில் போட்டியிடும் திலகபாமா மது ஒழிப்பு போராளி ஆவார்.தனது சொந்த ஊரில் மதுபான கடையை உடைத்து 27 நாட்கள் சிறை சென்றவர் நமது வேட்பாளர் திலகபாமா.இந்தத் தேர்தலுக்கு முன்பாக ஒன்று முடிவு செய்யப்பட்டுள்ளது .பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக நிச்சயம் வருவார் . வேட்பாளர் திலகபாமா வெற்றி பெற்றால் நானும் அவரும் மோடியை நேரடியாக சந்தித்து திண்டுக்கல் தொகுதிக்கு நலத்திட்டங்களை நேரடியாக கேட்டுக் பெறுவோம் . மக்கள் அதிமுகவையும், திமுகவையும் நம்ப தயாராகவில்லை. இவ்வாறு திண்டுக்கல்லில் அன்புமணி ராமதாஸ் பேசினார்.