நாமக்கல் மாவட்டத்தில் சீமான் நாளை தேர்தல் பிரச்சாரம்!

நாமக்கல் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக சீமான் பிரசாரம் செய்கிறார்.

Update: 2024-04-10 15:47 GMT

 சீமான் 

நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 4 முனை போட்டி நிலவுகிறது. நாம் தமிழர் கட்சி சார்பில் கனிமொழி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நாளை (11-ந்தேதி) நாமக்கல் மாவட்டம் வருகிறார். நாளை (ஏப்ரல் 11) வியாழக்கிழமை காலை 10 மணிக்கு பரமத்திவேலூர் 4 ரோடு சிவா தியேட்டர் பகுதியிலும், காலை 11.30 மணியளவில் நாமக்கல் பூங்கா சாலை பகுதியிலும், மதியம் 1 மணியளவில் ராசிபுரம் பேருந்து நிலையம் பகுதியில், நாமக்கல் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக சீமான் பிரசாரம் செய்கிறார்.
Tags:    

Similar News