நகர்ப்புறங்களில் குறைந்தது ஓட்டுப்பதிவு சதவீதம்; தேர்தல் கமிஷன் நடவடிக்கை!!

நகர்ப்புறங்களில் ஓட்டுப்பதிவு சதவீதம் குறைந்து வருவதை அடுத்து அதனை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளில் தேர்தல் கமிஷன் ஈடுபட்டுள்ளது.

Update: 2024-04-07 04:25 GMT

Election Commission

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், கிராமப்புறங்களில் அதிகளவில் ஓட்டுப்பதிவு நடந்துள்ளது. ஆனால், நகர்ப்புறங்களில் ஓட்டுப்பதிவு சதவீதம் குறைந்து வருவதால், அதை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில், தேர்தல் கமிஷன் ஈடுபட்டுள்ளது. தமிழகத்தில் லோக்சபா தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும், தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் மட்டுமல்லாமல், 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு பணிகளையும், தேர்தல் அதிகாரிகள் மேற்கொள்கின்றனர். கிராமப்புறங்களில் ஊர்வலம், பேரணி நடத்துவது, கல்லுாரி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது, சிலிண்டர், தண்ணீர் கேன், வாகனங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டுவது, கோலமிடுவது என, பல வகைகளில், 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். ஆனால், கடந்த தேர்தல்களில் பதிவான ஓட்டு சதவீதத்தை கணக்கிடும்போது, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நகர்ப்புறங்களைவிட கிராமங்களில், அதிகப்படியான ஓட்டு பதிவாகியிருப்பது தெரியவந்துள்ளது.
Tags:    

Similar News