வாணியம்பாடியில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட 60 புடவைகளை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர்
வாணியம்பாடியில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட 60 புடவைகளை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர்;
By : King News 24x7
Update: 2024-03-20 04:09 GMT
தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் புடவை
தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் புடவை
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட 60 புடவைகளை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் வேலூர் மக்களவைத் தொகுதியிற்க்குட்பட்ட திருப்பத்தூர் மாவட்டம். வாணியம்பாடி செட்டியப்பனூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி புவனேஸ்வரி தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்த போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை மேற்க்கொண்ட போது, காரை ஓட்டி வந்த சல்மான் கான் என்பவர், உரிய உரிய ஆவணங்களின்றி 60 புடவைகள் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது, உடனடியாக 60 புடவைகளையும் பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அவற்றை வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.. மேலும் புடவைகளை எடுத்து வந்த சல்மான் கானிடம் தேர்தல் அதிகாரிகள் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்...