ஆவுடையார் கோவில் அருகே தேர்தல் பறக்கும் படை சோதனை: 4 லட்சம் பறிமுதல்

ஆவுடையார் கோவில் அருகே தேர்தல் பறக்கும் படை சோதனையில் 4 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.;

Update: 2024-04-08 14:34 GMT

கோப்பு படம் 

ஆவுடையார்கோவில் அருகே ஒக்கூர் கிராமத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த பிரபாகரன் என்பவர் காரில் ரூ.4 லட்சம் கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து அறந்தாங்கி ஆர்டிஒ சிவக்குமாரிடம் ஒப்படைத்தனர். தாசில்தார் திருநாவுக்கரசு, சிலட்டூர் மண்டல துணை தாசில்தார் பாலமுருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News