பறக்கும் படை அதிரடி - காரில் கடத்திய ரேசன் பருப்பு பறிமுதல்

வாசுதேவநல்லூரில் பறக்கும் படை காரில் கடத்திய ரேசன் பருப்பு பறிமுதல் செய்தனர்.

Update: 2024-03-28 14:38 GMT
வாசுதேவநல்லூரில் பறக்கும் படை அதிரடி காரில் கடத்திய ரேசன் பருப்பு பறிமுதல்

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் அருகே எம்எல்ஏ அலுவலகம் முன்பு கொல்லம் மதுரை மெயின் ரோட்டில் தேர்தல் பறக்கும் படையினர் மண்டல துணை வளர்ச்சி அலுவலர் சசிகலா தலைமையில் இன்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது பத்து மூட்டைகளில் 400 கிலோ ரேசன் பருப்பு கண்டுபிடிக்கப்பட்டது.

அச்சன் புதூர் பார்வதிபுரம சேர்ந்த அரசப்பத்தேவர் மகன் சுப்பையா பாண்டியன் (43) காரில் வாசுதேநல்லூரில் இருந்து சேர்ந்தமரம் கொண்டு செல்வதாக தெரியவந்தது. காவல் உதவி ஆய்வாளர் நவமணி மற்றும் மாரியப்பன், பாலகிருஷ்ணன், பேச்சியப்பன் மற்றும் போலீசார் காரை சிவகிரி தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் மற்றும் மாவட்ட வழங்கல் நுகர்வோர் மற்றும் பாதுகாப்பு அலுவலர் அனிதா, தாசில்தார் ரவிக்குமார், தேர்தல் பிரிவு தாசில்தார் ரவி கணேஷ் ஆகியோரிடம் ஒப்படைக்கப் பட்டது.

Tags:    

Similar News