தேர்தல் விதிமீறல் - தேர்தலை நிறுத்தி வைக்க சுயேச்சை வேட்பாளர் மனு
கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் தேர்தல் விதிமீறல் அதிகரித்துள்ளதால் தேர்தலை நிறுத்தி வைக்கும்படி சுயேச்சை வேட்பாளர் கோவிந்தராஜ் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அதிகாரியான ஷரவன் குமாரிடம் மனு அளித்தார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (72) இவர் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்.நிலையில் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் தேர்தல் விதிமுறைகள் அதிகரித்திருப்பதாகவும் இதனால் தேர்தலை நிறுத்தி வைக்க கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான ஷரவன் குமார் மற்றும் தலைமை தேர்தல் அதிகாரி உள்ளிட்டோருக்கு மனு அனுப்பி உள்ளார்.
தேர்தல் சட்ட விதிகள் படி ஒரு கூட்டம் நடத்துவதற்கு 48 மணி நேரத்திற்கு முன் அனுமதி பெற வேண்டும் ஆனால் அனுமதி இல்லாமல் கூட்டம் நடத்துகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் கெங்கவல்லி பகுதியில் அமைச்சர் உதயநிதி பங்கேற்க பொதுமக்களை வாகனத்தில் அழைத்து வந்த போது இருவர் உயிரிழந்தனர்.மேலும் பொதுமக்களை அழைத்து வந்த சரக்கு ஆட்டோக்கள் அனுமதி பெற்று இயங்கியதா? யார் இதற்கு பொறுப்பு ஏற்றுக் கொள்வது.இது ஜனநாயக தேர்தல் அல்ல.தேர்தல் ஆணைய சட்ட விதிகளை முறையாக பயன்படுத்தவில்லை.தேர்தல் விதிமீறல்கள் அதிகரித்து காணப்படுகிறது என்று கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் தேர்தலை நிறுத்தி வைக்க கோரி கள்ளக்குறிச்சி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனு அளித்திருப்பதாகவும் .தலைமை தேர்தல் அதிகாரிக்கும் இமெயிலில் மனு அளித்திருப்பதாகவும், அரசு அதிகாரிகள் மீது புகார் தெரிவித்திருப்பதால் எனக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்