தேர்தலில் முறைகேடுகள்:சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் குற்றச்சாட்டு

நாடாளுமன்ற தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் குற்றச்சாட்டுயுள்ளார்.

Update: 2024-05-21 11:23 GMT
நாகர்கோவிலில் மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் பேட்டியளித்தார்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பார்வதிபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-       தற்போது ஏழு கட்டமாக நடைபெற்று வரும் பாராளுமன்றத் தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன.

குறிப்பாக முதற்கட்ட தேர்தல் முடிந்தபின் பதிவான வாக்குகளின் விவரத்தை சதவீத அடிப்படையில் வெளியிட  15 நாட்கள் எடுத்துக் கொண்டார்கள். எனவே தேர்தல் ஆணையம் திட்டமிட்டு காலதாமதம் செய்கிறது. வாக்கு சதவீதத்தை வெளியிடுவதில் குளறுபடி, வாக்குச்சீட்டுகளின் எண்ணிக்கையில் வித்தியாசம் போன்ற பல்வேறு கோளாறுகள் நடந்துள்ளன. இவையெல்லாம் ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கை இழக்க செய்வதாக உள்ளது.        

  மார்த்தாண்டம் மேம்பாலத்தை பொருத்தவரை அந்த பாலம் கட்டும் போது கட்டுமானம் சரியில்லை, தரமற்ற முறையில் கட்டப்படுவதாக புகார்  வைத்திருந்தோம். இப்போது அதில் சில விரிசல்கள் போன்ற பிரச்சினைகள் வந்துள்ளது. இது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும்.     கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கனிம வளங்கள் தொடர்ந்தது கடத்தப்பட்டு வருகின்றன. 

எனவே மாவட்ட நிர்வாகம் இதனை தடுக்க உரிய முறையில் நீதிமன்றத்தை அணுக வேண்டும்.       கேரள மாநிலத்தில் உள்ள மருத்துவ கழிவுகளை அங்கு  கொட்ட முடியாத அளவிற்கு அந்த மாநிலத்தில் கடும் விதிமுறைகள் உள்ளன. ஆனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு சோதனை சாவடிகளை கடந்து அங்குள்ள கழிவுகள் இங்கு கொட்டப்பட்டு வருகிறது. இதற்கு காரணமானவர்கள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று அவர் கூறினார்.      

இந்த பேட்டியின் போது முன்னாள் எம்பி பெல்லார் மின் , முன்னாள் எம்எல்ஏ லீமா ரோஸ், கட்சியின் மாவட்ட செயலாளர் செல்லசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News