தேர்தல் கட்டுப்பாடுகள் - சிலை வியாபாரம் குறைவு !
தேர்தல் கட்டுப்பாடால், ஆர்டர் கொடுத்தவர்கள் பணம் கொண்டு வர முடியாததால் கூடத்தில் சிலைகள் தேங்கும் நிலைமை என்று கூறினர்.
By : King 24x7 Angel
Update: 2024-03-26 09:15 GMT
மாமல்லபுரத்தில், கற்சிற்பக் கூடங்கள் ஏராளமாக உள்ளன. இந்தியா மற்றும் பிற நாடுகளில் உருவாகும் கோவில்களுக்கு, சுவாமியர் கற்சிலைகள் வடிக்கப்படுகின்றன. பண்ணை தோட்டங்களுக்கு, அலங்கார சிலைகள் வடிக்கப்படுகின்றன. அவை, சில லட்சம் ரூபாய் முதல், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ளவை. சிலை வாங்கும் தனி நபர் பலர், அதற்கு அளிக்கும் தொகைக்கு, முறையான வருமான கணக்கு வைத்திருப்பதில்லை என, கூறப்படுகிறது. பக்தர்கள் ஒருங்கிணைந்து, நன்கொடை வசூலித்து கோவில் கட்டும் சூழலில், வசூல் தொகைக்கும் வருமான கணக்கு இருக்காது. சிற்பக் கூடத்தில் நேரடியாக பணம் செலுத்தி, சிலையை பெறுவர். தற்போது, லோக்சபா தேர்தல் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால், சிலைகள் வாங்குவது முடங்கியுள்ளது. இதுகுறித்து, சிற்பக்கூடத்தினர் கூறியதாவது: இங்குள்ள சிற்பக்கூடங்களில், கடவுள் சிலைகள் உள்ளிட்டவை செய்ய, ஏற்கனவே ஆர்டர் கொடுத்தனர். சிலைகள் தயாராக உள்ளன. தேர்தல் கட்டுப்பாடால், ஆர்டர் கொடுத்தவர்கள் பணம் கொண்டு வர முடியாததால், தேர்தல் முடிந்த பின் வாங்கிக் கொள்வதாக கூறிவிட்டனர். இதனால், கூடத்தில் சிலைகள் தேங்கும். தேர்தலுக்கு பிறகே, புதிய சிலைகள் செய்ய ஆர்டர் கிடைக்கும். எங்களுக்கு ஒன்றரை மாதம் பாதிப்பு தான். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Less business
Less business
Less business
Less business
Less business