திருப்பூரில் காவலர்களுக்கான தேர்தல் பணி
திருப்பூரில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள காவல்துறையினருக்கு கணினி மூலம் சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
Update: 2024-04-16 06:39 GMT
திருப்பூர் பாராளுமன்ற பொதுத் தேர்தல்- 2024 நடைபெறுவதை முன்னிட்டு திருப்பூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் ஹிமான்சுகுப்தா, காவல் பார்வையாளர் மரு. ராம் கிருஷ்ணா ரவன்கர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள காவல்துறையினருக்கு கணினி மூலம் சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்யும் பணியினை துவக்கி வைத்தார்கள், உடன் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினபு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய் பீம் ஆகியோர் உள்ளனர்.