தாம்பரத்திற்கு வரும் மின்சார ரயில்கள் ரத்து

ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடப்பதால், வரும் 22ம் தேதி வரை மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-02-19 07:00 GMT
ரயில்வே
சென்னை கடற்கரை -- தாம்பரத்துக்கு வரும் 19, 20, 21ம் தேதிகளில் இரவு 8: 15, 9: 30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.சென்னை கடற்கரை -- தாம்பரத்துக்கு இன்று இரவு 8: 20, 9: 30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. தாம்பரம் -- சென்னை கடற்கரைக்கு, வரும் 19, 20, 21ம் தேதிகளில் இரவு 11: 20, 11: 40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள், எழும்பூர் வரை மட்டுமே இயக்கப்படும். செங்கல்பட்டு -- சென்னை கடற்கரைக்கு, வரும் 19, 20, 21ம் தேதிகளில் இரவு 11: 00 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள், எழும்பூர் வரை மட்டுமே இயக்கப்படும். கடற்கரை -- தாம்பரத்திற்கு இன்று இரவு 11: 15, 11: 35 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் எழும்பூரில் இருந்து இயக்கப்படும். செங்கல்பட்டு -- சென்னை கடற்கரைக்கு இன்று இரவு 11: 00 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், எழும்பூர் வரை மட்டுமே இயக்கப்படும் என, சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News