பழங்குடியின மக்கள் வீடுகளுக்கு மின் இணைப்பு : பாஜக கோரிக்கை!

சாத்தான்குளத்தில் பழங்குடியினர் மக்கள் வீடுகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக கோரிக்கை விடுத்துள்ளது. 

Update: 2023-12-16 04:57 GMT

மின் இணைப்பு : பாஜக கோரிக்கை!

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பேரூராட்சியில் மேல சாத்தான்குளம் அம்மன் கோயில் தெருவில் 30க்கு மேற்பட்ட பழங்குடியினர் குடியிருந்து வருகின்றனர். இவர்கள் பல ஆண்டுகளாக குடியிருந்து இன்னும் அவர்கள் மின் இணைப்பு வழங்கப்படவில்லையாம். இதனால் அவர்கள் தொடர்ந்து விண்ணபித்து வருகின்றனர்.  இந்நிலையில் தகவலின் பேரில் மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் தலைமையில் பாஜகவினர் பழங்குடி மக்களை சந்தித்து கேட்டறிந்தனர். பின்னர் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகம் சென்று மனு அளித்தனர். அந்த மனுவில் சாத்தான்குளத்தில் தலைமுறையாக பழங்குடியினர் இருந்து வருகின்றனர். அவர்களது வீடுகளுக்கு இன்னும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை. இதனால் பெரியோர்கள், குழந்தைகள் பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனர்.  அவர்கள் பயன்படுத்தி வரும் செல்போன்களுக்கு கடையில் பணம் கொடுத்து சார்ஜ் செய்து வருகின்றனர். இரவில் மின்சாரம் இல்லாமல் கொசு மற்றும் விஷ சந்துகளால் பாதிக்கப்பட்டும் வருகின்றனர். மேலும் அவர்களுக்கு காட்டு நாயக்கர் சமுதாய ஜாதி சான்றிதழும் பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் மறுக்கப்பட்டு வருகிறது. இதனால் இவர்களது குழந்தைகள் பள்ளி படிப்பை தொடர முடியாத நிலை உள்ளது.  ஆதலால் இம்மக்களுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்கிட வேண்டும் எனவும்,. வழங்க மறுக்கப்படும் பட்சத்தில் பாஜ சார்பில் போராட்டம் நடத்தப்படும் என குறிப்பிட்டுள்ளனர்.  அப்போது ஒன்றிய பாஜக தலைவர் சரவணன், ஒன்றிய பார்வையாளர் மகேஸ்வரன், ஒன்றிய பொதுச் செயலர் ராஜேஷ், சுற்றுச்சூழல் அணி மாவட்ட துணை செயலர் ஜெயசுந்தர்ராஜ், மாவட்ட அமைப்பு சாரா பிரிவு செயலர் ராம்மோகன், மாவட்ட துணைத் தலைவர் செல்வராஜ், நகரத் தலைவர் ஜோசப், ஒன்றிய துணைத் தலைவர் பொன்ராஜ், மாவட்ட ஆன்மீக பிரிவு செயலர் ராஜபாண்டியன், மாவட்ட தரவு தள செயலர் பிரவீன், நவீன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News