நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

சேலம் கிழக்கு கோட்டத்தில் நாளை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது

Update: 2024-01-09 08:59 GMT

சேலம் கிழக்கு கோட்டத்தில் நாளை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது

சேலம் கிழக்கு கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் குணவர்த்தினி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:- சேலம் கிழக்கு கோட்ட அலுவலகத்தில் மின்நுகர்வோருக்கான குறைதீர்க்கும் கூட்டம் நாளை (புதன்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் சேலம் உடையாப்பட்டி கிழக்கு காமராஜர் நகர் காலனியில் உள்ள அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில் கிழக்கு கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News