குப்பை சேகரிப்பு வாகனம் மூலம் மின்சாரம் - மாணவனுக்கு ஆட்சியர் பாராட்டு

கரூரில்,குப்பை சேகரிக்கும் வாகனம் மூலம் மின்சாரம் தயாரிக்கும் படைப்பை படைத்த அரசு பள்ளி மாணவனை மாவட்ட ஆட்சியர் பாராட்டினார்.

Update: 2024-01-23 05:00 GMT

ஆட்சியர் அலுவலகம் 

கரூர் மாநகராட்சி குமரன் உயர்நிலைப்பள்ளியில், பயிலும் ஒன்பதாம் வகுப்பு மாணவன் ராமன் "குப்பை சேகரிக்கும் வாகனம் மூலம் மின்சாரம் தயாரித்தல் என்ற அறிவியல் படைப்புக்காக, கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் இரண்டாம் இடம் பெற்றார். தற்போது தென்னிந்திய அளவில் 27-01-24 முதல் 01-02.24 வரை ஆந்திர மாநிலம், விஜயவாடாவில், தென்னிந்திய அளவில் நடைபெறும் அறிவியல் கண்காட்சியில் கலந்து கொள்ள மாணவன் ராமன் தேர்ச்சி பெற்றுள்ளார்.

இதனை தொடர்ந்து  கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அவர்களிடம், மாநில அளவில் இரண்டாம் பரிசு பெற்ற பரிசினை காண்பித்து வாழ்த்து பெற்றார்.  இந்நிகழ்வின்போது. மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை ஶ்ரீலேகா தமிழ்செல்வன், தனித்துணை ஆட்சியர் சைபுதீன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கருணாநிதி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் இளங்கோவன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் அன்புமணி, உதவி இயக்குநர் காலல் கருணாகரன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சண்முகவடிவேல் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News