மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேர்தலுக்கு தேவையான பொருட்களை ஏற்றி செல்லும் வாகனத்தை ஆட்சியர் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
Update: 2024-04-18 15:00 GMT
பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 முன்னிட்டு திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிகளின் வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேர்தலுக்கு தேவையான பொருட்களை அனுப்பும் பணி நடைபெற்றது. திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் இன்று (18.04.2024) நேரில் சென்று ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேர்தலுக்கு தேவையான பொருட்களை ஏற்றி செல்லும் வாகனத்தை கொடியசைத்து அனுப்பி வைத்தார்.