தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு: விண்ணப்பங்கள் வரவேற்பு 

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு (ஜூன், ஜூலை-2024) தனித் தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கபடுகிறது.

Update: 2024-03-31 16:04 GMT

பட்டய தேர்வு

வரும் ஜூன், ஜூலை 2024 இல் நடைபெற உள்ள தொடக்கக்கல்வி பட்டயத் தேர்விற்கு, தனித் தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.  இ

துகுறித்து, தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் கோ.கலா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து,

அதனை பூர்த்தி செய்து, ஏற்கனவே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழ்களின் அனைத்து நகல்களையும் கண்டிப்பாக இணைத்து, தேர்வர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அமைந்துள்ள, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வாயிலாக, கீழ் குறிப்பிடப்பட்டுள்ள தேதிகளில் விண்ணப்பிக்க வேண்டும். 

மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் வெப் கேமரா பொருத்தப்பட்டுள்ளதால், அந்நிறுவனங்களிலேயே புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து, தேர்வு கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.  தேர்வு கட்டண விவரம் ஒவ்வொரு பாடத்திற்கும் ரூபாய்.50, மதிப்பெண் சான்றிதழ் (முதலாம் ஆண்டு) ரூபாய்.100, மதிப்பெண் சான்றிதழ் (இரண்டாம் ஆண்டு) ரூபாய்.100, பதிவு மற்றும் சேவை கட்டணம் ரூபாய்.15,

ஆன்லைன் பதிவுக் கட்டணம் ரூபாய்.70 ஆகும்.  தேர்வு கட்டணம் மற்றும் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய நாட்கள்  01.04.2024 பிற்பகல் முதல் 06.04.2024 வரை விண்ணப்பிக்கலாம்.  சிறப்பு அனுமதி திட்டம் (தட்கல்)  01.04.2024 முதல் 06.04 2024 வரையிலான தேதிகளில் விண்ணப்பிக்க தவறும் தேர்வர்கள், சிறப்பு அனுமதி திட்டத்தில் (தட்கல்),

08.04.2024 மற்றும் 10.04.2024 தேதிகளில், சிறப்பு அனுமதிக் கட்டணம் ரூபாய்.1000 (ரூ.ஆயிரம்) செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். தகுதியற்ற தேர்வர்களின் விண்ணப்பங்கள் ரத்து செய்யப்படும். தபால் வழியாக பெறப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்" எனவும் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News