மறியலில் ஈடுபட முயன்ற தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் கைது

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட முயன்ற 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-07-04 06:06 GMT

விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் அமைந்துள்ள மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் அழகுராஜ் தலைமையில்,  தொடக்கக் கல்வித் துறையில் 500 க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில் தொடக்க கல்வித் துறையில் பதவி உயர்வுகள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் நடைபெற்று வரும் நிலையில் பதவி உயர்வு அளிக்க இயலாத நிலையிலும், உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு வரும் வரை பொது மாறுதல் கலந்தாய்வு நடத்துவதை நிறுத்தாமல் நடத்த துடிக்கும் தொடக்க கல்வித்துறையை கண்டித்தும், அறிவிக்கப்பட்ட பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணையினை மாற்றி அமைத்து ஒன்றிய அளவில் மட்டும் கலந்தாய்வினை நடத்திட வேண்டும்,

கடந்த 12 -10 - 2023 அன்று சென்னையில் டிக்டோ ஜக் பேரமைப்பின் மாநில உயர்மட்ட குழு உறுப்பினர்களுடன் கல்வித் துறை அமைச்சர்  தலைமையில் பள்ளி கல்வி இயக்குனர், தொடக்க கல்வி இயக்குனர், ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட 12 கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற கோரி ஆணை பிறப்பிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் பின்பு சாலை மறியலில் ஈடுபட முயன்ற 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார்திருமண மண்டபத்தில் அடைத்தனர்

Tags:    

Similar News