காரை சோதனை செய்ததில் யானை தந்தங்கள் பறிமுதல்
கன்னிவாடி அருகே வந்த காரை மடக்கி சோதனை நடத்தியதில் யானை தந்தங்கள் சிக்கின.;
Update: 2024-06-16 09:59 GMT
வனத்துறை
திண்டுக்கல் கன்னிவாடி வனசரகத்திற்குட்பட்ட பகுதியில் வனத்துறையினர் நேற்று கன்னிவாடி அருகே வந்த காரை மடக்கி சோதனை நடத்தினர். அதில் ஒரு ஜோடி யானை தந்தங்கள் இருந்தன.
தந்தங்களை பறிமுதல் செய்த வனத்துறையினர் காரில் வந்த கன்னிவாடியை சேர்ந்த சோமசுந்தரத்தை 54, வன அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். இவரது தகவலில் மதுரை, திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த 3 பெண்கள் என 6 பேரிடம் விசாரிக்கின்றனர்.