தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த யானைகள் - விரட்டியடித்த வனத்துறை
கடையநல்லூர் அருகே தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த யானை கூட்டத்தை வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டினர்.;
Update: 2024-05-01 06:52 GMT
ஊருக்குள் வந்த யானைகள்
தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூர் அருகே மேக்கரை பகுதிகளில் கோடை வெயில் காரணமாக வனப்பகுதிகளில் வறட்சி நிலவுகிறது. இதனால் வனவிலங்குகள் யானை, சிறுத்தை, மான், மிலா, காட்டுப் பன்றிகள் உள்ளிட்ட விலங்குகள் தண்ணீர் தேடி ஊருக்குள் வரும் நிலை ஏற்பட்டுள்ளது. மேக்கரை வன கிராம பகுதிகளில் தண்ணீர் தேடி யானைகள் இன்று அதிகாலை ஊருக்குள் கூட்டமாக வந்தன. இது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறை இடம் தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற வனத்துறையினர் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர்.